Total Pageviews

Friday, June 17, 2016

மூலம் மற்றும் ஆயில்யம் மோசமான நட்சத்திரங்களா?


அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்,

'மூலம்' மற்றும் 'ஆயில்யம்' இந்த இரு நட்சத்திரங்களின் பெயரை கேட்டாலே பொது மக்கள் முகம் சுளிக்கிறார்கள்

இந்த இரு நட்சத்திரங்களை பற்றிய 'தவறான கருத்து' பொது மக்கள் இடையே காலம் காலமாக 'பசுமரத்தாணி போல் பதிந்து இருக்கிறது'

இந்த இரு நட்சத்திரங்களை பற்றிய 'தவறான கருத்தை' நீக்கும் முயற்சியே இந்த பதிவு


மூல நட்சத்திரம் ஆனாலும் சரி,  ஆயில்ய நட்சத்திரம் ஆனாலும் சரி,  1ம் பாதம் மட்டுமே மாமனாருக்கும், மாமியாருக்கும் ஆகாது என்று துறை சார்ந்த வல்லுனர்கள்
தெரிவிக்கன்றனர்

 மாமனார், மாமியாருக்கு ஆகாது என்றே சொல்லப்பட்டுள்ளது.   மாமனார், மாமியார் இறந்து விடுவார்கள் என்று நான் படிக்கவுமில்லை,  தொழில் முறை ஜோதிடர்கள் (அல்லது) ஜோதிட வல்லுனர்கள் சொல்லி கேள்விப்படவுமில்லை


இதில் நாம் 'மூல நட்சத்திரம் - 1ம் பாதம்' ஏன் மாமனாருக்கு ஆகாது என்பதை 'நவாம்சம் - பகுதி 1ல்' பார்த்து விட்டோம்

இப்போது 'ஆயில்யம்-1ம்' பாதம் ஏன் மாமியாருக்கு ஆகாது என்பதை சுருக்கமாக பார்ப்போம்

'ஆயில்யம்' புதனின் நட்சத்திரமாகும்.  புதன் 'அறிவுக்கு' காரகனாவார் (authority)

 'ஆயில்யம்-1ம் பாதம்' நவாம்சத்தில் 'தேவ குரு - பிரகஸ்பதியின்' மூல திரிகோண வீடான 'தனுசில்' வரும்.   'குரு' நுண்ணறிவு, போதனை, ஞானம் இவற்றிற்கு காரகனாவார் (authority)

அதவாது 'ஆயில்யம்-1ம் பாதத்தில்' பிறந்த ஜாதகர் / ஜாதகி 'புதன் மற்றும் குருவின்' அம்சத்தோடு விளங்குவார்கள்.  நன்கு படித்தவராகவும், ஆழ்ந்து சிந்திப்பவராகவும் இருப்பார்கள்.

இப்படி இருப்பவர்களால் அவ்வப்போது 'போதனை' (அல்லது) 'அறிவுரை' சொல்லாமல் இருக்கமுடியாது .   இப்படி 'அறிவுரை' கூறும் மருமகளை எந்த 'மாமியார்' ஏற்று கொள்வார் என்று எனக்கு தெரியவில்லை??

 இந்த விதி 'அந்த கால' கூட்டு குடும்பத்திற்கு சரியாக இருக்கும் .  ஆனால் இப்போது 'அந்நிய கலாச்சாரத்தால்' குடும்ப அமைப்பு, திருமண பந்தம் என்று ஒட்டு மொத்தமாக சிதைந்து வருவதால் 'இந்த விதி' இந்த காலத்திற்கு பொருந்தாது

இந்த காலத்தில் 'நல்லவனாக' இருப்பதை விட 'வல்லவனாக' இருப்பதை தான் இந்த உலகம் விரும்புகிறது.   எனக்கு தெரிந்து பணம் மட்டுமே தற்போது பிரதானமாக விளங்குகிறது.

நல்லவர்களுக்கு இந்த 'சமுதாயம்' வைத்த பெயர் 'இளித்தவாயன்' (அல்லது) 'பழமைவாதி'.    'பழமைக்கும்', 'பழையனதுக்கும்' வேறுபாடு தெரியாதவர்களை தான் 'படித்தவர்கள்' என்றும் 'பகுத்தறிவாதிகள்' என்றும் இந்த 'சமூகம்' சொல்கிறது

'ஜோதிட கணிதங்கள்' பற்றிய அடுத்த பதிவை விரைவில் பதிகிறேன் நண்பர்களே

மற்ற விஷயங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்

Saturday, June 11, 2016

ஜோதிட கணிதங்கள் - 1



அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்,

இன்று நாம் ராசிகளின் குறியீடுகளையும், ஜோதிடத்தின் ஒரு சில அடிப்படை கணிதங்களையும் பார்ப்போம்

இவை நாம் பின்னால் படிக்க போகும் விஷயங்களுக்கு உதவியாக இருக்கும்

ராசிகளும் அதன் குறியீடுகளும் கீழே தரப்பட்டுள்ளன  



















இப்போது சில அடிப்படை ஜோதிட கணிதங்களை பார்ப்போம்

ராசி சக்கிரத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன என்பது நமக்கு தெரிந்ததே

ஒவ்வொரு நட்சத்திரமும் 13 பாகைகளும் (degrees) 20 கலைகளும் (arc minutes) கொண்டவை.  இங்கே 'arc minutes' என்பதை அப்படியே பயன்படுத்தவும்.  கடிகார நிமிடங்களுடன் ஒப்பிட வேண்டாம்.


1 / 360 deg (or) circle =  1 degree (1 பாகை)
1 / 60 deg = 1 arc minute (1 கலை)
1 degree = 60 arc minutes (60 கலைகள்)
1 முழு நட்சத்திரம் = 13 degree 20 arc minutes

1 lunar cycle = 27 நட்சத்திரங்கள்.  அதாவது சந்திரன் 360 degree அல்லது 'ராசி சக்கரத்தை' முழுமையாக 27 நட்சத்திரங்களையும் சுற்றி வர வேண்டும்

1 வருடம் = 360 நாட்கள் (வாக்கியப்படி).  பண்டைய பாபிலோனியர்கள் 'base number' 60ஐ பயன்படுத்தினார்கள் என்று ஒரு குறிப்பு உள்ளது

360 நாட்களை பூர்த்தி செய்ய 'சந்திரன்' 13 முறைகள் (lunar cycles) ராசி சக்கிரத்தையும் + 9 நட்சத்திரங்களையும் 'சுற்றி வர வேண்டும்'.

அதவாது '27 * 13 deg' = 351 + 9  = 360 நாட்கள்

ஒரு நட்சத்திரம் 4 பாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளன என்பதையும் நாம் அறிவோம்

1 முழு நட்சத்திரம் = 13 degree 20 arc minutes  (13 பாகைகள் 20 கலைகள்)

1ம் பாதம்      - 3 பாகை 20 கலைகள்
2ம் பாதம்      - 3 பாகை 20 கலைகள்
3ம் பாதம்      - 3 பாகை 20 கலைகள்   =>  9 பாகைகள்  + 60 கலைகள் = 10 பாகைகள்
4ம் பாதம்      - 3 பாகை 20 கலைகள்
                     =============
   மொத்தம்     13 பாகை 20 கலைகள்
                     =============


மற்ற விஷயங்களை அடுத்த பதிவில் பார்ப்போம் நண்பர்களே

Sunday, June 5, 2016

நவாம்ச கட்டம் போடுவது எப்படி - 2



அன்பு நண்பர்களுக்கு வணக்கம்

நவாம்சம் தொடர்ச்சி

முதலில் 'நட்சத்திரங்களையும்' அதற்கான 'அதிபதிகளையும்' கீழே கொடுத்துள்ளேன்.



குறிப்பு:-  நட்சத்திரங்களை மேற்குறிப்பிடுள்ளவாறு 'அதே' வரிசையில் தான் எழுத வேண்டும்.  இல்லை என்றால் நவாம்சம் 'தவறாகி' விடும்



'ராசி கட்டத்தில்' ஒரு கிரகம் 'அஸ்வினி-1ம் பாதத்தில்' இருக்கிறது என்று வைத்து கொள்வோம்

இது நவாம்சத்தில் 'மேஷத்தில்' வரும்.

'ராசி கட்டத்தில்' ஒரு கிரகம்  'அஸ்வினி-2ம் பாதத்தில்' இருந்தால், நவாம்சத்தில் 'ரிஷபத்தில்' வரும்

'ராசி கட்டத்தில்' ஒரு கிரகம்  'அஸ்வினி-3ம் பாதத்தில்' இருந்தால், நவாம்சத்தில் 'மிதுனத்தில்' வரும்

'ராசி கட்டத்தில்' ஒரு கிரகம்  'அஸ்வினி-4ம் பாதத்தில்' இருந்தால், நவாம்சத்தில் 'கடகத்தில்' வரும்

இப்போது 'ராசி கட்டத்தில்' ஒரு கிரகம்  'மகம்-1ம் பாதத்தில்' இருந்தால் எங்கு வரும் என்று யூகிக்க முடிகிறதா ?   தங்களின் யூகம் சரியானதே

 'மகம்-1ம் பாதத்தில்' இருக்கும் கிரகம், நவாம்சத்தில் 'சிம்மத்தில்' வரும்


இப்போது நவாம்சம் போடும் முறையை பார்ப்போம்

(1)  கேதுவின் நட்சத்திரங்களான 'அஸ்வினி, மகம், மூலம்' பாதங்களில், 1ம் பாதம் 'மேஷத்திலும்', 2ம் பாதம் 'ரிஷபத்திலும்', 3ம் பாதம் 'மிதுனத்திலும்' 4ம் பாதம் 'கடகத்திலும்' வரும்

(2)  சுக்கிரனின் நட்சத்திரங்களான 'பரணி, பூரம், பூராடம்' பாதங்களில், 1ம் பாதம் 'சிம்மத்திலும்', 2ம் பாதம் 'கன்னியிலும்', 3ம் பாதம் 'துலாத்திலும்' 4ம் பாதம் 'விருச்சிகத்திலும்' வரும்

(3)  சூரியனின்  நட்சத்திரங்களான 'கார்த்திகை, உத்திரம், உத்திராடம்' பாதங்களில், 1ம் பாதம் 'தனுசிலும்', 2ம் பாதம் 'மகரத்திலும்', 3ம் பாதம் 'கும்பத்திலும்' 4ம் பாதம் 'மீனத்திலும்' வரும்

இப்போது 'சந்திரனின்' நட்சத்திரங்களான 'ரோகின, அஸ்தம், திருவோனத்திற்க்கு'  மீண்டும் 'மேஷத்தில்' இருந்து துவங்க வேண்டும்

(4)  சந்திரனின் நட்சத்திரங்களான 'ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம், பாதங்களில், 1ம் பாதம் 'மேஷத்திலும்', 2ம் பாதம் 'ரிஷபத்திலும்', 3ம் பாதம் 'மிதுனத்திலும்' 4ம் பாதம் 'கடகத்திலும்' வரும்

(5)  செவ்வாயின் நட்சத்திரங்களான 'மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்' பாதங்களில், 1ம் பாதம் 'சிம்மத்திலும்', 2ம் பாதம் 'கன்னியிலும்', 3ம் பாதம் 'துலாத்திலும்' 4ம் பாதம் 'விருச்சிகத்திலும்' வரும்

(6)  ராகுவின்   நட்சத்திரங்களான 'திருவாதிரை, சுவாதி, சதயம்' பாதங்களில், 1ம் பாதம் 'தனுசிலும்', 2ம் பாதம் 'மகரத்திலும்', 3ம் பாதம் 'கும்பத்திலும்' 4ம் பாதம் 'மீனத்திலும்' வரும்


இப்போது 'குருவின்' நட்சத்திரங்களான 'புனர்பூசம், விசாகம், பூரட்டாதி'  மீண்டும் 'மேஷத்தில்' இருந்து துவங்க வேண்டும்


(7)  குருவின்  நட்சத்திரங்களான 'புனர்பூசம், விசாகம், பூரட்டாதி' பாதங்களில், 1ம் பாதம் 'மேஷத்திலும்', 2ம் பாதம் 'ரிஷபத்திலும்', 3ம் பாதம் 'மிதுனத்திலும்' 4ம் பாதம் 'கடகத்திலும்' வரும்

(8)  சனியின் நட்சத்திரங்களான 'பூசம், அனுஷம், உத்திரட்டாதி' பாதங்களில், 1ம் பாதம் 'சிம்மத்திலும்', 2ம் பாதம் 'கன்னியிலும்', 3ம் பாதம் 'துலாத்திலும்' 4ம் பாதம் 'விருச்சிகத்திலும்' வரும்

(9)  புதனின் நட்சத்திரங்களான 'ஆயில்யம், கேட்டை, ரேவதி' பாதங்களில், 1ம் பாதம் 'தனுசிலும்', 2ம் பாதம் 'மகரத்திலும்', 3ம் பாதம் 'கும்பத்திலும்' 4ம் பாதம் 'மீனத்திலும்' வரும்

இவ்வாறாக நாம் நட்சத்திரங்களை வைத்து 'நவாம்சம்' போடலாம்.

இல்லை, மேலே குறிப்பிட்டுள்ள முறை நினைவில் வைத்து கொள்ள கடினமாக இருக்கிறது என்றால் கீழே இருக்கும் 'short-cutஐ' முறையை பயன்படுத்தலாம்

கேது, சந்திரன், குரு இவர்களின் நட்சத்திரங்கள் நவாம்சத்தில் 'மேஷம்' முதல் 'கடகம்' வரை வரும்
சுக்கிரன், செவ்வாய், சனி இவர்களின் நட்சத்திரங்கள் நவாம்சத்தில் 'சிம்மம்' முதல் 'விருச்சிகம்' வரை வரும்
சூரியன், ராகு, புதன் இவர்களின் நட்சத்திரங்கள் நவாம்சத்தில் 'தனுசு' முதல் 'மீனம்' வரை வரும்

நவாம்சத்தை 'என்னால் முடிந்த அளவு' எளிமையாக சொல்லி இருக்கிறேன் என்றே நினைக்கிறேன்


மற்ற விஷயங்களை அடுத்த பதிவில் பார்ககலாம் நண்பர்களே

நன்றி