அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்,
இன்று நாம் ராசிகளின் குறியீடுகளையும், ஜோதிடத்தின் ஒரு சில அடிப்படை கணிதங்களையும் பார்ப்போம்
இவை நாம் பின்னால் படிக்க போகும் விஷயங்களுக்கு உதவியாக இருக்கும்
ராசிகளும் அதன் குறியீடுகளும் கீழே தரப்பட்டுள்ளன
இப்போது சில அடிப்படை ஜோதிட கணிதங்களை பார்ப்போம்
ராசி சக்கிரத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன என்பது நமக்கு தெரிந்ததே
ஒவ்வொரு நட்சத்திரமும் 13 பாகைகளும் (degrees) 20 கலைகளும் (arc minutes) கொண்டவை. இங்கே 'arc minutes' என்பதை அப்படியே பயன்படுத்தவும். கடிகார நிமிடங்களுடன் ஒப்பிட வேண்டாம்.
1 / 360 deg (or) circle = 1 degree (1 பாகை)
1 / 60 deg = 1 arc minute (1 கலை)
1 degree = 60 arc minutes (60 கலைகள்)
1 முழு நட்சத்திரம் = 13 degree 20 arc minutes
1 lunar cycle = 27 நட்சத்திரங்கள். அதாவது சந்திரன் 360 degree அல்லது 'ராசி சக்கரத்தை' முழுமையாக 27 நட்சத்திரங்களையும் சுற்றி வர வேண்டும்
1 வருடம் = 360 நாட்கள் (வாக்கியப்படி). பண்டைய பாபிலோனியர்கள் 'base number' 60ஐ பயன்படுத்தினார்கள் என்று ஒரு குறிப்பு உள்ளது
360 நாட்களை பூர்த்தி செய்ய 'சந்திரன்' 13 முறைகள் (lunar cycles) ராசி சக்கிரத்தையும் + 9 நட்சத்திரங்களையும் 'சுற்றி வர வேண்டும்'.
அதவாது '27 * 13 deg' = 351 + 9 = 360 நாட்கள்
ஒரு நட்சத்திரம் 4 பாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளன என்பதையும் நாம் அறிவோம்
1 முழு நட்சத்திரம் = 13 degree 20 arc minutes (13 பாகைகள் 20 கலைகள்)
1ம் பாதம் - 3 பாகை 20 கலைகள்
2ம் பாதம் - 3 பாகை 20 கலைகள்
3ம் பாதம் - 3 பாகை 20 கலைகள் => 9 பாகைகள் + 60 கலைகள் = 10 பாகைகள்
4ம் பாதம் - 3 பாகை 20 கலைகள்
=============
மொத்தம் 13 பாகை 20 கலைகள்
=============
மற்ற விஷயங்களை அடுத்த பதிவில் பார்ப்போம் நண்பர்களே
No comments:
Post a Comment