Total Pageviews

18242

Sunday, June 5, 2016

நவாம்ச கட்டம் போடுவது எப்படி - 2



அன்பு நண்பர்களுக்கு வணக்கம்

நவாம்சம் தொடர்ச்சி

முதலில் 'நட்சத்திரங்களையும்' அதற்கான 'அதிபதிகளையும்' கீழே கொடுத்துள்ளேன்.



குறிப்பு:-  நட்சத்திரங்களை மேற்குறிப்பிடுள்ளவாறு 'அதே' வரிசையில் தான் எழுத வேண்டும்.  இல்லை என்றால் நவாம்சம் 'தவறாகி' விடும்



'ராசி கட்டத்தில்' ஒரு கிரகம் 'அஸ்வினி-1ம் பாதத்தில்' இருக்கிறது என்று வைத்து கொள்வோம்

இது நவாம்சத்தில் 'மேஷத்தில்' வரும்.

'ராசி கட்டத்தில்' ஒரு கிரகம்  'அஸ்வினி-2ம் பாதத்தில்' இருந்தால், நவாம்சத்தில் 'ரிஷபத்தில்' வரும்

'ராசி கட்டத்தில்' ஒரு கிரகம்  'அஸ்வினி-3ம் பாதத்தில்' இருந்தால், நவாம்சத்தில் 'மிதுனத்தில்' வரும்

'ராசி கட்டத்தில்' ஒரு கிரகம்  'அஸ்வினி-4ம் பாதத்தில்' இருந்தால், நவாம்சத்தில் 'கடகத்தில்' வரும்

இப்போது 'ராசி கட்டத்தில்' ஒரு கிரகம்  'மகம்-1ம் பாதத்தில்' இருந்தால் எங்கு வரும் என்று யூகிக்க முடிகிறதா ?   தங்களின் யூகம் சரியானதே

 'மகம்-1ம் பாதத்தில்' இருக்கும் கிரகம், நவாம்சத்தில் 'சிம்மத்தில்' வரும்


இப்போது நவாம்சம் போடும் முறையை பார்ப்போம்

(1)  கேதுவின் நட்சத்திரங்களான 'அஸ்வினி, மகம், மூலம்' பாதங்களில், 1ம் பாதம் 'மேஷத்திலும்', 2ம் பாதம் 'ரிஷபத்திலும்', 3ம் பாதம் 'மிதுனத்திலும்' 4ம் பாதம் 'கடகத்திலும்' வரும்

(2)  சுக்கிரனின் நட்சத்திரங்களான 'பரணி, பூரம், பூராடம்' பாதங்களில், 1ம் பாதம் 'சிம்மத்திலும்', 2ம் பாதம் 'கன்னியிலும்', 3ம் பாதம் 'துலாத்திலும்' 4ம் பாதம் 'விருச்சிகத்திலும்' வரும்

(3)  சூரியனின்  நட்சத்திரங்களான 'கார்த்திகை, உத்திரம், உத்திராடம்' பாதங்களில், 1ம் பாதம் 'தனுசிலும்', 2ம் பாதம் 'மகரத்திலும்', 3ம் பாதம் 'கும்பத்திலும்' 4ம் பாதம் 'மீனத்திலும்' வரும்

இப்போது 'சந்திரனின்' நட்சத்திரங்களான 'ரோகின, அஸ்தம், திருவோனத்திற்க்கு'  மீண்டும் 'மேஷத்தில்' இருந்து துவங்க வேண்டும்

(4)  சந்திரனின் நட்சத்திரங்களான 'ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம், பாதங்களில், 1ம் பாதம் 'மேஷத்திலும்', 2ம் பாதம் 'ரிஷபத்திலும்', 3ம் பாதம் 'மிதுனத்திலும்' 4ம் பாதம் 'கடகத்திலும்' வரும்

(5)  செவ்வாயின் நட்சத்திரங்களான 'மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்' பாதங்களில், 1ம் பாதம் 'சிம்மத்திலும்', 2ம் பாதம் 'கன்னியிலும்', 3ம் பாதம் 'துலாத்திலும்' 4ம் பாதம் 'விருச்சிகத்திலும்' வரும்

(6)  ராகுவின்   நட்சத்திரங்களான 'திருவாதிரை, சுவாதி, சதயம்' பாதங்களில், 1ம் பாதம் 'தனுசிலும்', 2ம் பாதம் 'மகரத்திலும்', 3ம் பாதம் 'கும்பத்திலும்' 4ம் பாதம் 'மீனத்திலும்' வரும்


இப்போது 'குருவின்' நட்சத்திரங்களான 'புனர்பூசம், விசாகம், பூரட்டாதி'  மீண்டும் 'மேஷத்தில்' இருந்து துவங்க வேண்டும்


(7)  குருவின்  நட்சத்திரங்களான 'புனர்பூசம், விசாகம், பூரட்டாதி' பாதங்களில், 1ம் பாதம் 'மேஷத்திலும்', 2ம் பாதம் 'ரிஷபத்திலும்', 3ம் பாதம் 'மிதுனத்திலும்' 4ம் பாதம் 'கடகத்திலும்' வரும்

(8)  சனியின் நட்சத்திரங்களான 'பூசம், அனுஷம், உத்திரட்டாதி' பாதங்களில், 1ம் பாதம் 'சிம்மத்திலும்', 2ம் பாதம் 'கன்னியிலும்', 3ம் பாதம் 'துலாத்திலும்' 4ம் பாதம் 'விருச்சிகத்திலும்' வரும்

(9)  புதனின் நட்சத்திரங்களான 'ஆயில்யம், கேட்டை, ரேவதி' பாதங்களில், 1ம் பாதம் 'தனுசிலும்', 2ம் பாதம் 'மகரத்திலும்', 3ம் பாதம் 'கும்பத்திலும்' 4ம் பாதம் 'மீனத்திலும்' வரும்

இவ்வாறாக நாம் நட்சத்திரங்களை வைத்து 'நவாம்சம்' போடலாம்.

இல்லை, மேலே குறிப்பிட்டுள்ள முறை நினைவில் வைத்து கொள்ள கடினமாக இருக்கிறது என்றால் கீழே இருக்கும் 'short-cutஐ' முறையை பயன்படுத்தலாம்

கேது, சந்திரன், குரு இவர்களின் நட்சத்திரங்கள் நவாம்சத்தில் 'மேஷம்' முதல் 'கடகம்' வரை வரும்
சுக்கிரன், செவ்வாய், சனி இவர்களின் நட்சத்திரங்கள் நவாம்சத்தில் 'சிம்மம்' முதல் 'விருச்சிகம்' வரை வரும்
சூரியன், ராகு, புதன் இவர்களின் நட்சத்திரங்கள் நவாம்சத்தில் 'தனுசு' முதல் 'மீனம்' வரை வரும்

நவாம்சத்தை 'என்னால் முடிந்த அளவு' எளிமையாக சொல்லி இருக்கிறேன் என்றே நினைக்கிறேன்


மற்ற விஷயங்களை அடுத்த பதிவில் பார்ககலாம் நண்பர்களே

நன்றி

No comments:

Post a Comment