Total Pageviews

18224

Friday, June 17, 2016

மூலம் மற்றும் ஆயில்யம் மோசமான நட்சத்திரங்களா?


அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்,

'மூலம்' மற்றும் 'ஆயில்யம்' இந்த இரு நட்சத்திரங்களின் பெயரை கேட்டாலே பொது மக்கள் முகம் சுளிக்கிறார்கள்

இந்த இரு நட்சத்திரங்களை பற்றிய 'தவறான கருத்து' பொது மக்கள் இடையே காலம் காலமாக 'பசுமரத்தாணி போல் பதிந்து இருக்கிறது'

இந்த இரு நட்சத்திரங்களை பற்றிய 'தவறான கருத்தை' நீக்கும் முயற்சியே இந்த பதிவு


மூல நட்சத்திரம் ஆனாலும் சரி,  ஆயில்ய நட்சத்திரம் ஆனாலும் சரி,  1ம் பாதம் மட்டுமே மாமனாருக்கும், மாமியாருக்கும் ஆகாது என்று துறை சார்ந்த வல்லுனர்கள்
தெரிவிக்கன்றனர்

 மாமனார், மாமியாருக்கு ஆகாது என்றே சொல்லப்பட்டுள்ளது.   மாமனார், மாமியார் இறந்து விடுவார்கள் என்று நான் படிக்கவுமில்லை,  தொழில் முறை ஜோதிடர்கள் (அல்லது) ஜோதிட வல்லுனர்கள் சொல்லி கேள்விப்படவுமில்லை


இதில் நாம் 'மூல நட்சத்திரம் - 1ம் பாதம்' ஏன் மாமனாருக்கு ஆகாது என்பதை 'நவாம்சம் - பகுதி 1ல்' பார்த்து விட்டோம்

இப்போது 'ஆயில்யம்-1ம்' பாதம் ஏன் மாமியாருக்கு ஆகாது என்பதை சுருக்கமாக பார்ப்போம்

'ஆயில்யம்' புதனின் நட்சத்திரமாகும்.  புதன் 'அறிவுக்கு' காரகனாவார் (authority)

 'ஆயில்யம்-1ம் பாதம்' நவாம்சத்தில் 'தேவ குரு - பிரகஸ்பதியின்' மூல திரிகோண வீடான 'தனுசில்' வரும்.   'குரு' நுண்ணறிவு, போதனை, ஞானம் இவற்றிற்கு காரகனாவார் (authority)

அதவாது 'ஆயில்யம்-1ம் பாதத்தில்' பிறந்த ஜாதகர் / ஜாதகி 'புதன் மற்றும் குருவின்' அம்சத்தோடு விளங்குவார்கள்.  நன்கு படித்தவராகவும், ஆழ்ந்து சிந்திப்பவராகவும் இருப்பார்கள்.

இப்படி இருப்பவர்களால் அவ்வப்போது 'போதனை' (அல்லது) 'அறிவுரை' சொல்லாமல் இருக்கமுடியாது .   இப்படி 'அறிவுரை' கூறும் மருமகளை எந்த 'மாமியார்' ஏற்று கொள்வார் என்று எனக்கு தெரியவில்லை??

 இந்த விதி 'அந்த கால' கூட்டு குடும்பத்திற்கு சரியாக இருக்கும் .  ஆனால் இப்போது 'அந்நிய கலாச்சாரத்தால்' குடும்ப அமைப்பு, திருமண பந்தம் என்று ஒட்டு மொத்தமாக சிதைந்து வருவதால் 'இந்த விதி' இந்த காலத்திற்கு பொருந்தாது

இந்த காலத்தில் 'நல்லவனாக' இருப்பதை விட 'வல்லவனாக' இருப்பதை தான் இந்த உலகம் விரும்புகிறது.   எனக்கு தெரிந்து பணம் மட்டுமே தற்போது பிரதானமாக விளங்குகிறது.

நல்லவர்களுக்கு இந்த 'சமுதாயம்' வைத்த பெயர் 'இளித்தவாயன்' (அல்லது) 'பழமைவாதி'.    'பழமைக்கும்', 'பழையனதுக்கும்' வேறுபாடு தெரியாதவர்களை தான் 'படித்தவர்கள்' என்றும் 'பகுத்தறிவாதிகள்' என்றும் இந்த 'சமூகம்' சொல்கிறது

'ஜோதிட கணிதங்கள்' பற்றிய அடுத்த பதிவை விரைவில் பதிகிறேன் நண்பர்களே

மற்ற விஷயங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்

No comments:

Post a Comment