Total Pageviews

Tuesday, May 31, 2016

நவாம்ச கட்டம் போடுவது எப்படி - 1



அன்பு நண்பர்களுக்கு வணக்கம்

இந்த பதிவு ஜோதிடம் தெரியாதவர்களுக்கு (அல்லது) என்னை போன்று ஜோதிடம் கற்று கொண்டு இருப்பவர்களுக்காக பதிவிடபடுகிறது

நவாம்சம் என்பது ராசி கட்டத்தின்  'zoomed version' என்று சொல்லலாம்

ஒரு ராசியில் '9' பாதங்கள் உள்ளன என்பது தெரிந்ததே.  12 ராசிகள் x 9 பாதங்கள் = 108 பாதங்கள்

எந்ததெந்த பாதங்கள் எந்தெந்த ராசியில் வரும் என்பதை கீழே கொடுத்துள்ளேன்


மேஷம்           - அசுவினி, பரணி, கார்த்தி கை 1-ஆம் பாதம் முடிய
ரிஷபம்           - கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம்                                பாதம் முடிய
மிதுனம்         - மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 
                             3-ஆம் பாதம் முடிய
கடகம்            - புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய
சிம்மம்           - மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
கன்னி             - உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் 
                             முடிய
துலாம்            - சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் 
                              முடிய
விருச்சிகம்    - விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய
தனுசு             - மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
மகரம்            - உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் 
                            பாதம் முடிய
கும்பம்          - அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் 
                            முடிய
மீனம்            - பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய


உதாரணம் :-

ராசி கட்டத்தில் 'செவ்வாய்' தனுசு ராசியில், மூலம்-1ம் பாதத்தில் இருக்கிறார் என்று வைத்து கொள்வோம் 

இப்போது நவாம்சம் போடும் போது 'மூலம்-1ம் பாதம்' மேஷ ராசியில் வரும் (அதாவது 'செவ்வாய்' நவாம்சத்தில் அவரது 'ஆட்சி' வீடான 'மேஷ' ராசியிலே இருப்பார்).  இதன் பலன் ஜாதகர் / ஜாதகி மனதில் பட்டதை 'வெளிப்படையாக' பேசும் குணம் கொண்டவராக இருப்பார்.

'மூலம்' நட்சத்திரம் என்றால் 'மாமனாருக்கு' ஆகாது என்பதை 'அந்த காலத்து நடைமுறைகளுக்கு' ஏற்ப நம் முன்னோர்கள் சொல்ல இதுவும் ஒரு காரணம்.   ஆனால் இது கால போக்கில் மாறி மருமகள் 'மூல நட்சத்திரம்' என்றால் 'மாமனார் மண்டையை போட்டு விடுவார்' என்று நம்மவர்கள் மாற்றிவிட்டனர்

இதை போன்று 'ராசி கட்டத்தில்' உள்ள ஒவ்வொரு கிரகத்திற்கும், அவர்கள் 'நவாம்சத்தில்' எங்கு உள்ளனர் என்று பார்த்து நாம் பலன் சொல்ல வேண்டும்

கூடுதல் தகவல்கள்

நவாம்சத்தில் கிரங்களின் உச்சம், நீச்சம் பார்க்கப்பட வேண்டும் என்று ஒரு சாரார் கூறுகின்றனர்

நவாம்சத்தில் கிரகங்களுக்கு  உச்சம், நீச்சம் எல்லாம் இல்லை என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். 

நவாம்சம் அங்கிசம் (கிரகம் ஏறிய நட்சத்திர அதிபதி) பார்க்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது

நவாம்சம் போடுவதில் இரண்டு முறைகள் பின்பற்றபடுகின்றன (1)  நட்சத்திர அதிபதிகளை வைத்து (2)  ராசி கட்டத்தில் கிரகங்கள் இருக்கும் பாகையை (degree) வைத்து

நவாம்சம் எப்படி போடுவது என்பதை நாளை பார்ப்போம் நண்பர்களே

Sunday, May 29, 2016

'இரட்டை பிறவிகளுக்கான' (அல்லது) 'இரட்டையர்' ஜோதிட விதிகள்


அன்பு நண்பர்களுக்கு வணக்கம்


 இன்று எனக்கு தெரிந்த இரட்டை பிறவிகளுக்கான ஜோதிட விதிகளை பார்ப்போம்

பொதுவாக 'இரட்டை பிறவிகளுக்கு' புத பகவானை மைய்யமாக வைத்தே பல விதிகள் எழுதப்பட்டுள்ளன

(1)  ஒரு ஜாதகரின் 5ம் வீடு உபய ராசியாகி (மிதுனம், தனுசு, மீனம்) அத்துடன் 'புத பகவான்' சம்பந்தபட்டால் இரட்டை பிறவி அமைப்பு என்று சொல்லபடுகிறது

இதில் 'ஏனோ' கன்னியா ராசியை சேர்த்து கொள்ளவில்லை

(2)  'கேதுவையும்' இந்த அமைப்பில் சேர்த்து கொள்கிறார்கள்.  அதாவது 'கேது பகவான்', புதன் வீட்டில் இருந்தாலோ (ராசி அல்லது அம்சம்) அல்லது புதனின் நட்சத்திர சாரம் ஏறி இருந்தாலோ 'இரட்டை பிறவி' (அல்லது) 'இரட்டையர்' அமைப்பு என்று சொல்லபடுகிறது

(3)  சனி 11ம் இடத்தை பார்த்து, செவ்வாய் 3ம் இடத்தை பார்த்து, 3 மற்றும் 11 அதிபதிகள் சேர்ந்து எங்கு இருப்பினும் அவர்கள் இரட்டை பிறவிகளே.

இதில் விதிவிலக்காக 3ம் அதிபதி 'ஆட்சி' பெற்றால் அவர் '11ம் அதிபதியுடன்' சேர வேண்டிய அவசியம் இல்லை

மேலே சொன்ன விதியை (#3 மட்டும்) நானே பரிசோதித்து இருக்கிறேன்.  மிக சரியாக வருகிறது

இரட்டையர்களுக்கு தாய் / தந்தை ஆகும் அமைப்பு யாருக்கு

(1)  5ல் புதன் இருந்து மற்ற கிரகங்கள் 6-8-12ல் மறைந்தால் அவர் இரட்டையரை ஈன்றெடுப்பார்

(2)  விருச்சிகத்தில் 'சந்திரன்' இருந்து அவரை 'புதன்' பார்த்தால் இரட்டை பிறவிகளுக்கு 'தாய் (அல்லது) தந்தை' ஆகும் அமைப்பு அன்று சொல்ல படுகிறது

(3)   'மிதுனம்', 'தனுசு' (அல்லது) 'மீனம்' லக்னமாகி சூரியன், சந்திரன், குரு மூவரும் இரட்டைப்படை ராசியை (அதாவது பெண் ராசியை) அடைந்தால் இரட்டையர் அமைப்பு என்று சொல்ல படுகிறது

குறிப்பு:-  மேலே சொல்லப்பட்ட விதிகள் நான் 'பரிசோதிக்கதவை'.  நான் படித்ததை கொடுத்து இருக்கிறேன்.  அவ்வளவே.  விதிகள் எந்த அளவுக்கு ஒத்து வருகின்றன என்பதை 'பகிருமாறு' கேட்டு கொள்கிறேன்


மற்ற விஷயங்களை அடுத்த பதிவில் பார்ப்போம் நண்பர்களே

நன்றி

Saturday, May 28, 2016

ஜோதிடமும் - பகுத்தறிவாதமும்


ஜோதிடமும் - பகுத்தறிவாதமும்

தற்போது 'facebookல்' வைரலாக பரவும் 'ஜோதிடத்திற்கு எதிரான' கருத்துக்கள் கொண்ட வீடியோ link கீழே கொடுக்கப்பட்டுள்ளது


Neeya Naana Video


https://www.facebook.com/Relaxplzz/videos/1125385360845125/?comment_id=1160908473959480&ref=notif&notif_t=like&notif_id=1464464192878989

பகுத்தரிவாதிகளுக்கு மிகவும் பிடித்த வீடியோ இதுவாக தான் இருக்க வேண்டும் என்று நினைகிறேன் :-)

அந்த வீடியோவில் உள்ள அந்த கேள்விகளுக்கான விடைகளை பிறகு பார்ப்போம்

இந்த பக்கத்தை யாரேனும் பகுத்தறிவாதிகள் படிக்க நேர்ந்தால் 'ஜோதிடத்தை புறந்தள்ளி விட்டு'  அந்த வீடியோவில் உள்ள கேள்விகளுக்கு விடை காண வேண்டும்


பார்க்கலாம் பகுத்தறிவாதிகள் எந்த அளவிற்கு 'பகுத்து-ஆய்ந்து-அறிகிறார்கள்' என்று :-)

அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே 

பூமி மைய vs சூரிய மைய கொள்கை - 6

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்

இந்த பதிவுடன் 'பூமி vs சூரிய' மைய கொள்கையை முடித்து கொள்வோம்

கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் தொடருவோம்.

எனக்கு தெரிந்த சிறு சிறு ஜோதிட பகுதிகளையும் எழுத வேண்டுமல்லவா

கடந்த பதிவுகளில் இருந்து நாம் 'கீழ் ககுறிப்பிட்டுள்ள' புரிதலுக்கு வரலாம்

(1)  'பூமி மையம்' சரியானதா (அல்லது) 'சூரிய மையம்' சரியானதா என்பதை நாம் 'ஒரு வரியில்' விஞ்ஞான ரீதியாகவே 'சொல்லிவிட முடியாது'.

இரண்டு கொள்கைகளிலும் 'சாதக-பாதக' அம்சங்கள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது



(2)   'பூமி சுற்றுகிறது' என்பதை நிரூபிக்க இது வரை நடத்தப்பட்ட அத்தனை 'விஞ்ஞான பரிசோதனைகளும்' (scientific experiments) எனக்கு தெரிந்த வரை தோல்வியில் தான் முடிந்து இருக்கிறது

இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 'Airy's failure experiment' பூமி சுற்றவில்லை என்பதற்கு ஆதாரமாக 'நிறைய இடங்களில்' பேசபடுகிறது

இருந்தாலும் நான் சொன்னால் யாரும் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் :-)


Sir Fred Hoyle
-----------------------

“We know that the difference between a heliocentric theory and a geocentric theory is one of relative motion only,and that such a difference has no physical significance…”Today we cannot say that the Copernican theory is “right” and the Ptolemaic theory is “wrong” in any meaningful sense. The two theories…are physically equivalent to one another.”

https://en.wikipedia.org/wiki/Fred_Hoyle


இன்னும் நிறைய 'விஞ்ஞானிகள்' ஏகப்பட்ட விஷயங்களை சொல்லி இருக்கிறார்கள்.  அதை எல்லாம் சிறிது கால இடைவெளி விட்டு பிறகு பார்ப்போம்

(3)   விஞ்ஞானிகளோ (அல்லது) பகுத்தரிவாதிகளோ 'பூமி சுற்றும் பட்சத்தில்' பறவை தன் கூட்டை எப்படி கண்டுபிடிக்கிறது என்பதற்கு 'விடை சொல்லியே தீர வேண்டும்'.   ஏனெனில் இது ஒரு 'பாமரனின்' கேள்வி அல்லவா?

எனவே ஜோதிடம் 'பூமி மைய' கொள்கையை பின்பற்றுவது தவறு என்று விஞ்ஞான ரீதியாகவே சொல்ல முடியாது

மற்ற விஷயங்களை அடுத்த பதிவில் பார்ககலாம் நண்பர்களே

நன்றி

Friday, May 27, 2016

பூமி மைய vs சூரிய மைய கொள்கை - 5

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்

கடந்த பதிவின் தொடர்ச்சி


'சூரிய மைய கொள்கையை' பற்றி மேலும் 2 கேள்விகளுக்கான விடைகளை பார்ப்போம்

(1) எந்த கருவியை பயன்படுத்தி 'copernicus' (அல்லது) 'galileo' பூமி சுற்றுகிறது என்று கண்டுபிடித்தனர் ? 


(2) எந்த கருவியை பயன்படுத்தி 'copernicus' (அல்லது) 'galileo' பூமி '1100 மைல் வேகத்தில்' சுற்றுவதை கண்டுபிடித்தனர் ? 

எனக்கு தெரிந்த வரை (அல்லது) நான் படித்த வரை 'எந்த கருவியின் துணை கொண்டும்' அவர்கள் அதை சொல்ல வில்லை

மாறாக 'கணிதத்தின்' மூலமாகவே அவை சொல்லப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது 

இல்லை, இல்லை.  அப்படி எல்லாம் இல்லை.  உன் பிதற்றலை நிறுத்து என்று நீங்கள் சொல்வது எனக்கு தெரிகிறது :-)

விடை தெரிந்தவர்கள் 'அந்த கருவிகளின் பெயர்களையும்' அவை 'எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன என்பதையும்' எனக்கு தெரிவித்தால் நானும் தெரிந்து கொள்வேன் 
 

இது வரை 'சூரிய மற்றும் பூமி' மைய கொள்கைகளை பற்றி மிக சுருக்கமாக பார்த்தோம்.  (இது முடிவற்ற விவாதம் என்பதே உண்மை)

இப்போது 'ஜோதிடம்' பூமி மைய கொள்கையை பின்பற்றுவதற்கான 'முக்கிய காரணங்கள்'  கீழே கொடுக்கப்பட்டுள்ளன

(1)  இந்த பிரபஞ்சத்தின் அனைத்து உயிர்களுமே இந்த 'பூமியில்' தான் சஞ்சரிகின்றன என்பதை நாம் அறிந்ததே

(2)  வானில் இருந்து வரும்  'நட்சத்திர ஒளிகள்'  பூமியை (எனக்கு தெரிந்த வரை) மட்டுமே வந்தடைகின்றன.   (வானில் இருந்து விழும் 'விண் கற்கள்' மற்றும் இன்ன பிற 'வஸ்த்துக்கள்' எனக்கு தெரிந்து 'பூமியை' தவிர வேறு 'கிரகத்தினில்' விழுந்ததாக தெரியவில்லை)

என்ன தான் மேலே சொல்லப்பட்ட விஷயங்கள் 'ஏற்று கொள்ளும் படியாக' இருந்தாலும் 'விஞ்ஞானம்' இல்லாமல் எங்களால் இதை எல்லாம் ஏற்று கொள்ள முடியாது என்று சொல்பவரா நீங்கள் ?

உங்களுக்காகவே எனக்கு தெரிந்த ஒரு 'பௌதீக விதியை' (physics law) கீழே கொடுத்துள்ளேன்

"When you are dealing with some force acted upon an object in an environment, we consider that the object of interest as the origin and base our analysis on that object"

மேலே சொல்லப்பட்ட விதி போதும் என்று நினைக்கிறேன்

'பூமி' இயற்க்கை அன்னையால் நமக்கு அளிக்கப்பட்ட கொடை.  எனக்கு தெரிந்த வரை (அல்லது) நான் படித்த வரை 'அனைத்து உயிர்களும்' வாழ தகுதியான ஒரே இடம் 'பூமி' மட்டும் தான்


மற்ற விஷயங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம் நண்பர்களே

நன்றி

Thursday, May 26, 2016

பூமி மைய vs சூரிய மைய கொள்கை - 4

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்

'Copernicus' மற்றும் 'Galileo' எதற்காக 'பூமி மைய்ய கொள்கையை நிராகரித்தனர்'  என்பதனை நேற்று கொஞ்சம் 'விஞ்ஞான ரீதியாக' பார்த்தோம்.

ஆனால் நம் எல்லோர்க்கும் அவை புரியாதல்லவா.  நாம் எல்லோரும் 'அறிவியிலலோ (அல்லது) வானியல்' மேதைகளோ அல்லவே

எனவே இப்போது எந்த 'அறிவியலும்' கலக்காத எளிய 'பாமரனின்' ஒரு சில சாதாரண கேள்விகளை பார்ப்போம்


1)  'சூரிய மைய்ய கொள்கையின் படி' பூமி 1100 மைல் வேகத்தில் (தோராயமாக) மேற்கில் இருந்து கிழக்காக (West to East) சுற்றுகிறது என்பது நம்மில் பலருக்கு தெரிந்து இருக்கும்


இப்போது ஓர் வாதத்துக்காக 'பூமி சுற்றவில்லை' என்று வைத்து கொள்வோம்.

'பூமி சுற்றாத போதே' பறவைகள் (உதாரணத்திற்கு 'புறாவை' எடுத்து கொள்வோம்) பல மைல்கள் தூரம் பறந்து சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்து பின்பு சரியாக தன்னுடைய 'கூடு' இருக்கும் திரும்பி வருகிறது.

இது எப்படி சாத்தியம் என்று 'விஞ்ஞானிகள்' கண்டுபிடிக்க முடியாமல் இன்றைய நாள் வரை விடை தெரியமால் உள்ளனர்

இப்போது 'பூமி' 1100 மைல் வேகத்தில் சுற்றினால் 'பறவையால்' எப்படி தன்னுடைய 'கூட்டை' கண்டுபிடிக்க முடியும்?   'பறவைகள்' இரை தேடி பூமியின் எத்திசையில் வேண்டுமானாலும் பறக்கலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது

இதையும் பகுத்தறிவாதிகள் சிந்திக்க மாட்டார்கள்.  ஆனாலும் அவர்கள் சொல்லுவது தான் சரி.

மற்ற விஷயங்களுக்கு 'விஞ்ஞானிகளால்' (அல்லது) 'பகுத்தறிவாதிகளால்' பதில் சொல்ல முடியவில்லை என்றாலும் பரவாயில்லை.

இந்த கேள்விக்கு அவர்கள் பதில் அளித்து தான் ஆக வேண்டும்.  

ஏனெனில் இந்த விஷயம் 'படித்தவர்கள்' முதல் 'பாமரன்' வரை எல்லோருக்குமே புரியும்.  தெரியும்.

இன்னும் ஒரு கேள்வியோடு இன்றைய பதிவை நிறைவு செய்வோம் நண்பர்களே

(2)   'சூரிய மைய்ய கொள்கையின் படி' பூமி தன்னுடைய அச்சில் சுழல்வது மட்டுமில்லாமல் தன்னுடன் ஒட்டி இருக்கும் 'காற்று மண்டலத்தையும்' (earth atmosphere) சேர்த்து சுழல செய்கிறது

'காற்று மண்டலம்' சுழலும் போது  'காற்று மண்டலத்தின்' அங்கமான மேக கூட்டங்கள் மட்டும் தனியாக 'நாற் திசைகளிலும்' கடந்து செல்வதை (passing clouds) பார்க்க முடிகிறது.

இதுவும் எப்படி சாத்தியம் என்று எனக்கு தெரியவில்லை

மற்ற விஷயங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம் நண்பர்களே

நன்றி

Wednesday, May 25, 2016

பூமி மைய vs சூரிய மைய கொள்கை - 3

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்

'Copernicus' மற்றும் 'Galileo' எதற்காக 'பூமி மைய்ய கொள்கையை நிராகரித்தனர்' என்பதை இப்போது பார்ப்போம்

நீண்ட காலமாக (அல்லது) பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த 'பூமி மைய கொள்கையில்' ஒரு சில குறைபாடுகளை 'copernicus' மற்றும் 'galileo' கண்டுகொண்டனர்.

இங்கே குறைபாடுகள் என்பது வானியல் கணித ரீதியாக (astronomical calculations) என்று எடுத்துகொள்க

(1)  'பூமி மைய கொள்கையில்' சூரிய கிரகணம் (solar eclipse)  பற்றி தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்படவில்லை.

ஆனால் தற்போது உள்ள  'சூரிய மைய்ய கொள்கையிலும்' இதே நிலை தான் நீடிக்கிறது.   இதை பற்றி தற்போது சுருக்கமாக பார்க்கலாம் (விரிவாக பின்னர் எழுதுகிறேன்)


சூரிய கிரகணத்தை பற்றி தற்கால விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்

 "the motion of the moon "outstrips" that of the earth and cause the west to east shadow of the moon upon the earth"
 
 
அதாவது சூரிய கிரகணம் நிகழும் அன்று ஒரு நாள் மட்டும் 'சந்திரன்' தன்னுடைய வழக்கமான வேகத்தை அதி வேகத்தில் சுழல்கிறது.   சூரிய கிரகணம் முடிந்த பிறகு 'automaticகாக' எப்பொழுதும் போல் 'சந்திரன்' தன்னுடைய பழைய வேகத்தை அடைகிறது.

இது எப்படி சாத்தியம் என்பதை விஞ்ஞானிகள் எனக்கு தெரிந்த வரை விளக்கவில்லை

பகுத்தறிவாதிகள் இதை பற்றி எல்லாம் படிக்கவும் மாட்டார்கள், சிந்திக்கவும் மாட்டார்கள்.  ஆனால் அவர்கள் சொல்வது தான் சரி

இதன் மூலமாக 'சூரிய மைய்ய கொள்கையில்' உள்ள பல குறைபாடுகளில் ஒன்றை மட்டும் இப்போது நாம் தெரிந்து கொண்டோம்

(2)  'பூமி மைய்ய கொள்கையில்' கிரகங்களின் வக்கிரக கதியை (Retrograde movements) பற்றி டாலமி (Ptolemy)  அவர்களின் 'வானியல் கணிதம்' எளிதில் விளங்கும்படியாகவோ (அல்லது) 'அறிவியல் ரீதியாக' எளிதில் நிரூபிக்கும் வகையில் இல்லை

இந்த விஷயத்தில் 'சூரிய மைய்ய கொள்கையை' பொறுத்த வரைக்கும் 'வானியல் கணிதம்' சற்று 'better' என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


ஆனால் இங்கேயும் 'பூமி மைய்ய கொள்கை' தோற்று விடவில்லை.   வக்கிர கதியை பற்றி   'டாலமி' அவர்கள் தந்த 'வானியல் கணிதம்' இந்த பேரண்டத்திற்கு (அதாவது galaxyக்கு) வெளியில் இருந்து பார்த்தால் 'சரியாக இருக்கும்' என்கிற கருத்தும் நிலவுகிறது

மற்ற விஷயங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம் நண்பர்களே

நன்றி

Tuesday, May 24, 2016

பூமி மைய vs சூரிய மைய கொள்கை - 2

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்

இந்த பதிவில் நாம் 'பூமி மற்றும் சூரிய' மைய கொள்கைகளை பற்றிய தொடர்ச்சியை பார்ப்போம்

கடந்த பதிவில் மனிதர்கள் (கணித மேதைகள்) எப்படி தன தேவைகேற்ப, வசதிக்கேற்ப கணிதத்தை மாற்றி அமைத்து கொண்டார்கள் என்பதனை பார்த்தோம்

இதே போல் அறிவியலாளர்கள் 'பூமி' மற்றும் 'சூரிய' மைய கொள்கையினை எப்படி கையாண்டனர் மற்றும் கையாளுகின்றனர் என்பதனை பார்ப்போம்


பூமி மைய கொள்கையினை 'டாலமி' (Ptolemy) என்பவர் 11வது நூற்றாண்டில் இந்த உலகிற்கு தெரிவித்தார்.  அதாவது பூமி தான் இந்த பேரண்டத்தின் மைய்யமாக இருப்பதாகவும், பூமியை சுற்றி தான் வானவெளியில் அயனங்கள் நடப்பதாகவும் தெரிவித்தார்

அவர் என் அப்படி சொன்னார் என்பதை சுருக்கமாக பார்ப்போம்

1)  பூமி சுற்றுவதை யாருமே உணரவில்லை.  இது இன்றைய நாள் வரை எந்த மனிதனாலும் உனரபடதா விஷயமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


2)  சாதாரணமாக 'வான்வெளியை' பார்க்கும் போது (அல்லது) ஆகாயத்தை பார்க்கும் போது 'சூரியன்', 'சந்திரன்' மற்றும் இதர கிரங்கங்கள் பூமியை சுற்றி வருவதாகவே தோன்றியது

இந்த கொள்கை 'பல நூற்றாண்டுகளாக' (கிட்டத்தட்ட 16ம் நூற்றாண்டு வரை) எதிர்க்கபடமலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது

அதன் பின்பு 'copernicus', 'galileo' போன்றவர்கள் இந்த உலகிற்கு 'சூரிய மைய்ய அறிமுகபடுத்தினார்கள்'

நாளைய பதிவில் நாம் கீழ்க்காணும் வினாக்களுக்கு சுருக்கமான பதில்களை பார்ப்போம்

1)  'Copernicus' மற்றும் 'Galileo' எதற்காக 'பூமி மைய்ய கொள்கையை நிராகரித்தனர்'?  2)  'Copernicus' மற்றும் 'Galileo' பூமி மைய்ய கொள்கையை நிராகரித்தது சரி தானா?
3)   'Copernicus' மற்றும் 'Galileo' எந்த கருவியின் துணை கொண்டு 'பூமி சுற்றுவதை' கண்டுபிடித்தனர் ?
4)   சூரிய மைய்ய கொள்கை மட்டுமே சரியானதா ?

இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் பார்ப்போம் நண்பர்களே


நன்றி

Monday, May 23, 2016

பூமி மைய vs சூரிய மைய கொள்கை - 1

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்

இந்த பதிவில் நாம் 'பூமி மற்றும் சூரிய' மைய கொள்கைகளை பற்றி பார்ப்போம் 

ஜோதிடம் 'பூமி மைய கொள்கையை பின்பற்றுகிறது'.

ஜோதிடம் 'பூமி மைய கொள்கையை' தான் பின்பற்றவும் முடியும்.  இதற்கான பொதுவான மற்றும் அறிவியல் காரணங்களை பின்பு பார்ப்போம்

ஆனால் நாம் நேரடியாக பூமி vs சூரிய மைய கொள்கைகளை பார்பதற்கு முன் ஒரு சில அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வோம்

நம் அனைவருக்குமே அடிப்படையான கணிதம் ' 1+1=2'  (ஒன்றையும் இன்னொரு ஒன்றையும் கூட்டினால் 'இரண்டு') என்பது தெரியும் .   இதில் என்ன இருக்கிறது?

'1+1=2' எப்பொழுதுமே இரண்டு ('2') என்று தான் வருமா ?    நிச்சயமாக இல்லை 

என்ன நண்பர்களே சற்று 'அறிவிலி' தனமாக தோன்றுகிறது இல்லையா தங்களுக்கு  ?

சரி,  ஏன் அப்படி ?

இதை நான் சொல்லவில்லை.  நாம் கற்ற 'அறிவியலும்', 'கணிதமுமே' நமக்கு சொல்லி கொடுத்து இருக்கிறது

'கம்ப்யூட்டர் சயின்ஸ்' பாடத்தில் 'பைனரி அடிசன்' (binary addition) மற்றும் 'பூலியன் அல்ஜீப்ரா' (boolean algebra)  என்று இரு கணித முறைகள் உள்ளன

'Binary addition'  அண்ட் 'boolean algebra' -  0's அண்ட் 1's மட்டுமே அடிப்படையாக கொண்டது.

இங்கே 'ஒன்று என்கிற என்னோடு மற்றொரு ஒன்றை கூட்டினால்' (1+1) விடை '2' என்று வராது

இதை நான் இங்கே சொல்வதற்கு இரண்டு 'மிக முக்கியாமான' காரணங்கள் உண்டு

முதல் காரணம் -  பகுத்தரிவாதிகளின் முதல் கேள்வியே இது தான்.   1+1=2 என்று தானே வரவேண்டும்.  மேலே கூறியுள்ள விஷயங்களின் மூலம் 1+1=2 என்று எப்பொழுதுமே வர முடியாது என்பது 'கணித ரீதியாகவும்' அவர்களின் முதல் கடவுளான 'அறிவியல் ரீதியாகவும்'  நிருபிக்கபட்டுளது

இரண்டாவது காரணம் - பள்ளி மற்றும் கல்லூரிகளில் 1+1=2 என்று தான் நாம் எல்லோருமே படித்து இருப்போம்.

ஆனால் மனிதன் அவன் 'தேவைகளுக்கு ஏற்ப' ஒரு சில விஷயங்களை 'உருவாக்குவதற்கும்', 'இலகுவாக்குவதர்க்கும்'  அவன் உருவாக்கிய 'கணிதத்தை'  அவனே மாற்றி அமைத்து கொண்டான் என்பது இதன் மூலம் தெளிவாகிறது

என்னடா இவன் 'பூமி மைய்ய மற்றும் சூரிய மைய்ய' கொள்கையை எழுதிகிறேன் என்று சொல்லிவிட்டு 'பால பாடம்' நடத்துகிறானே என்கிற உங்களுடைய 'mind voice' எனக்கு புரிகிறது

 'பூமி மைய்ய மற்றும் சூரிய மைய்ய' தொடர்ச்சியை நாளை பார்ப்போம்

நன்றி 

Sunday, May 22, 2016

ஜோதிடம் உண்மையா? பொய்யா?


அன்பு நண்பர்களுக்கு வணக்கம் ,

ஜோதிடம் உண்மையா ?  பொய்யா ?  பார்க்கலாமா ?  பார்க்ககூடாதா ?  என்று பல கேள்விகள் நம் எல்லோர் மனத்திலும் இருக்கிறது

பகுத்தறிவாதிள் இதை மூடத்தனம் என்றே சொல்கின்றனர்

விஞ்ஞானிகளோ இது வானியல் ரீதியாக சாத்தியமற்றது என்று சொல்கின்றனர்


ஆனால் ஜோதிடர்கள் சொல்லும் பலன் சில நேரங்களில் மிகச்சரியாகவும், சில நேரங்களில் தவறாகவும் ஆகிவிடுகின்றது

ஜோதிடரின் கணிப்பு தவறாக போகும் போது பகுத்தறிவாதிகள் ஏளனம் செய்கின்றனர்

ஆனால் ஜோதிடரின் கணிப்பு சரியாகும் போது 'இது எப்படி நடக்கிறது' என்று புரிந்து கொள்ள முயலுவதில்லை. 

ஜோதிடம் பொய் என்றால் பலன் எப்படி (சில நேரங்களில் என்றால் கூட) சரியாக வரமுடியும் ?  இந்த கேள்விக்கு யாரும் விடை காண முயற்சிப்பதில்லை

இனி வரும் பதிவுகளில் பகுத்தரிவாதிகளின் பொதுவான கேள்விகளுக்கும், ஜோதிடத்தின் அடிப்படையான 'பூமி மைய கொள்கை' பற்றி பார்ப்போம்

ஆனால்  விஞ்ஞான ரீதியாக   'சூரிய மைய கொள்கை' தானே சரியானது ?   பூமியை மையப்படுத்திய 'ஜோதிடத்தை' எப்படி ஏற்று கொள்ள முடியும் ?  இதற்கான பதில்களை பின் வரும் பகுதிகளில் நாம் பார்ப்போம்


மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்

நன்றி