Total Pageviews

Tuesday, May 31, 2016

நவாம்ச கட்டம் போடுவது எப்படி - 1



அன்பு நண்பர்களுக்கு வணக்கம்

இந்த பதிவு ஜோதிடம் தெரியாதவர்களுக்கு (அல்லது) என்னை போன்று ஜோதிடம் கற்று கொண்டு இருப்பவர்களுக்காக பதிவிடபடுகிறது

நவாம்சம் என்பது ராசி கட்டத்தின்  'zoomed version' என்று சொல்லலாம்

ஒரு ராசியில் '9' பாதங்கள் உள்ளன என்பது தெரிந்ததே.  12 ராசிகள் x 9 பாதங்கள் = 108 பாதங்கள்

எந்ததெந்த பாதங்கள் எந்தெந்த ராசியில் வரும் என்பதை கீழே கொடுத்துள்ளேன்


மேஷம்           - அசுவினி, பரணி, கார்த்தி கை 1-ஆம் பாதம் முடிய
ரிஷபம்           - கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம்                                பாதம் முடிய
மிதுனம்         - மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 
                             3-ஆம் பாதம் முடிய
கடகம்            - புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய
சிம்மம்           - மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
கன்னி             - உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் 
                             முடிய
துலாம்            - சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் 
                              முடிய
விருச்சிகம்    - விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய
தனுசு             - மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
மகரம்            - உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் 
                            பாதம் முடிய
கும்பம்          - அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் 
                            முடிய
மீனம்            - பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய


உதாரணம் :-

ராசி கட்டத்தில் 'செவ்வாய்' தனுசு ராசியில், மூலம்-1ம் பாதத்தில் இருக்கிறார் என்று வைத்து கொள்வோம் 

இப்போது நவாம்சம் போடும் போது 'மூலம்-1ம் பாதம்' மேஷ ராசியில் வரும் (அதாவது 'செவ்வாய்' நவாம்சத்தில் அவரது 'ஆட்சி' வீடான 'மேஷ' ராசியிலே இருப்பார்).  இதன் பலன் ஜாதகர் / ஜாதகி மனதில் பட்டதை 'வெளிப்படையாக' பேசும் குணம் கொண்டவராக இருப்பார்.

'மூலம்' நட்சத்திரம் என்றால் 'மாமனாருக்கு' ஆகாது என்பதை 'அந்த காலத்து நடைமுறைகளுக்கு' ஏற்ப நம் முன்னோர்கள் சொல்ல இதுவும் ஒரு காரணம்.   ஆனால் இது கால போக்கில் மாறி மருமகள் 'மூல நட்சத்திரம்' என்றால் 'மாமனார் மண்டையை போட்டு விடுவார்' என்று நம்மவர்கள் மாற்றிவிட்டனர்

இதை போன்று 'ராசி கட்டத்தில்' உள்ள ஒவ்வொரு கிரகத்திற்கும், அவர்கள் 'நவாம்சத்தில்' எங்கு உள்ளனர் என்று பார்த்து நாம் பலன் சொல்ல வேண்டும்

கூடுதல் தகவல்கள்

நவாம்சத்தில் கிரங்களின் உச்சம், நீச்சம் பார்க்கப்பட வேண்டும் என்று ஒரு சாரார் கூறுகின்றனர்

நவாம்சத்தில் கிரகங்களுக்கு  உச்சம், நீச்சம் எல்லாம் இல்லை என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். 

நவாம்சம் அங்கிசம் (கிரகம் ஏறிய நட்சத்திர அதிபதி) பார்க்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது

நவாம்சம் போடுவதில் இரண்டு முறைகள் பின்பற்றபடுகின்றன (1)  நட்சத்திர அதிபதிகளை வைத்து (2)  ராசி கட்டத்தில் கிரகங்கள் இருக்கும் பாகையை (degree) வைத்து

நவாம்சம் எப்படி போடுவது என்பதை நாளை பார்ப்போம் நண்பர்களே

No comments:

Post a Comment