Total Pageviews

Sunday, May 22, 2016

ஜோதிடம் உண்மையா? பொய்யா?


அன்பு நண்பர்களுக்கு வணக்கம் ,

ஜோதிடம் உண்மையா ?  பொய்யா ?  பார்க்கலாமா ?  பார்க்ககூடாதா ?  என்று பல கேள்விகள் நம் எல்லோர் மனத்திலும் இருக்கிறது

பகுத்தறிவாதிள் இதை மூடத்தனம் என்றே சொல்கின்றனர்

விஞ்ஞானிகளோ இது வானியல் ரீதியாக சாத்தியமற்றது என்று சொல்கின்றனர்


ஆனால் ஜோதிடர்கள் சொல்லும் பலன் சில நேரங்களில் மிகச்சரியாகவும், சில நேரங்களில் தவறாகவும் ஆகிவிடுகின்றது

ஜோதிடரின் கணிப்பு தவறாக போகும் போது பகுத்தறிவாதிகள் ஏளனம் செய்கின்றனர்

ஆனால் ஜோதிடரின் கணிப்பு சரியாகும் போது 'இது எப்படி நடக்கிறது' என்று புரிந்து கொள்ள முயலுவதில்லை. 

ஜோதிடம் பொய் என்றால் பலன் எப்படி (சில நேரங்களில் என்றால் கூட) சரியாக வரமுடியும் ?  இந்த கேள்விக்கு யாரும் விடை காண முயற்சிப்பதில்லை

இனி வரும் பதிவுகளில் பகுத்தரிவாதிகளின் பொதுவான கேள்விகளுக்கும், ஜோதிடத்தின் அடிப்படையான 'பூமி மைய கொள்கை' பற்றி பார்ப்போம்

ஆனால்  விஞ்ஞான ரீதியாக   'சூரிய மைய கொள்கை' தானே சரியானது ?   பூமியை மையப்படுத்திய 'ஜோதிடத்தை' எப்படி ஏற்று கொள்ள முடியும் ?  இதற்கான பதில்களை பின் வரும் பகுதிகளில் நாம் பார்ப்போம்


மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்

நன்றி

No comments:

Post a Comment