Total Pageviews

Sunday, May 29, 2016

'இரட்டை பிறவிகளுக்கான' (அல்லது) 'இரட்டையர்' ஜோதிட விதிகள்


அன்பு நண்பர்களுக்கு வணக்கம்


 இன்று எனக்கு தெரிந்த இரட்டை பிறவிகளுக்கான ஜோதிட விதிகளை பார்ப்போம்

பொதுவாக 'இரட்டை பிறவிகளுக்கு' புத பகவானை மைய்யமாக வைத்தே பல விதிகள் எழுதப்பட்டுள்ளன

(1)  ஒரு ஜாதகரின் 5ம் வீடு உபய ராசியாகி (மிதுனம், தனுசு, மீனம்) அத்துடன் 'புத பகவான்' சம்பந்தபட்டால் இரட்டை பிறவி அமைப்பு என்று சொல்லபடுகிறது

இதில் 'ஏனோ' கன்னியா ராசியை சேர்த்து கொள்ளவில்லை

(2)  'கேதுவையும்' இந்த அமைப்பில் சேர்த்து கொள்கிறார்கள்.  அதாவது 'கேது பகவான்', புதன் வீட்டில் இருந்தாலோ (ராசி அல்லது அம்சம்) அல்லது புதனின் நட்சத்திர சாரம் ஏறி இருந்தாலோ 'இரட்டை பிறவி' (அல்லது) 'இரட்டையர்' அமைப்பு என்று சொல்லபடுகிறது

(3)  சனி 11ம் இடத்தை பார்த்து, செவ்வாய் 3ம் இடத்தை பார்த்து, 3 மற்றும் 11 அதிபதிகள் சேர்ந்து எங்கு இருப்பினும் அவர்கள் இரட்டை பிறவிகளே.

இதில் விதிவிலக்காக 3ம் அதிபதி 'ஆட்சி' பெற்றால் அவர் '11ம் அதிபதியுடன்' சேர வேண்டிய அவசியம் இல்லை

மேலே சொன்ன விதியை (#3 மட்டும்) நானே பரிசோதித்து இருக்கிறேன்.  மிக சரியாக வருகிறது

இரட்டையர்களுக்கு தாய் / தந்தை ஆகும் அமைப்பு யாருக்கு

(1)  5ல் புதன் இருந்து மற்ற கிரகங்கள் 6-8-12ல் மறைந்தால் அவர் இரட்டையரை ஈன்றெடுப்பார்

(2)  விருச்சிகத்தில் 'சந்திரன்' இருந்து அவரை 'புதன்' பார்த்தால் இரட்டை பிறவிகளுக்கு 'தாய் (அல்லது) தந்தை' ஆகும் அமைப்பு அன்று சொல்ல படுகிறது

(3)   'மிதுனம்', 'தனுசு' (அல்லது) 'மீனம்' லக்னமாகி சூரியன், சந்திரன், குரு மூவரும் இரட்டைப்படை ராசியை (அதாவது பெண் ராசியை) அடைந்தால் இரட்டையர் அமைப்பு என்று சொல்ல படுகிறது

குறிப்பு:-  மேலே சொல்லப்பட்ட விதிகள் நான் 'பரிசோதிக்கதவை'.  நான் படித்ததை கொடுத்து இருக்கிறேன்.  அவ்வளவே.  விதிகள் எந்த அளவுக்கு ஒத்து வருகின்றன என்பதை 'பகிருமாறு' கேட்டு கொள்கிறேன்


மற்ற விஷயங்களை அடுத்த பதிவில் பார்ப்போம் நண்பர்களே

நன்றி

No comments:

Post a Comment