Total Pageviews

Monday, May 23, 2016

பூமி மைய vs சூரிய மைய கொள்கை - 1

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்

இந்த பதிவில் நாம் 'பூமி மற்றும் சூரிய' மைய கொள்கைகளை பற்றி பார்ப்போம் 

ஜோதிடம் 'பூமி மைய கொள்கையை பின்பற்றுகிறது'.

ஜோதிடம் 'பூமி மைய கொள்கையை' தான் பின்பற்றவும் முடியும்.  இதற்கான பொதுவான மற்றும் அறிவியல் காரணங்களை பின்பு பார்ப்போம்

ஆனால் நாம் நேரடியாக பூமி vs சூரிய மைய கொள்கைகளை பார்பதற்கு முன் ஒரு சில அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வோம்

நம் அனைவருக்குமே அடிப்படையான கணிதம் ' 1+1=2'  (ஒன்றையும் இன்னொரு ஒன்றையும் கூட்டினால் 'இரண்டு') என்பது தெரியும் .   இதில் என்ன இருக்கிறது?

'1+1=2' எப்பொழுதுமே இரண்டு ('2') என்று தான் வருமா ?    நிச்சயமாக இல்லை 

என்ன நண்பர்களே சற்று 'அறிவிலி' தனமாக தோன்றுகிறது இல்லையா தங்களுக்கு  ?

சரி,  ஏன் அப்படி ?

இதை நான் சொல்லவில்லை.  நாம் கற்ற 'அறிவியலும்', 'கணிதமுமே' நமக்கு சொல்லி கொடுத்து இருக்கிறது

'கம்ப்யூட்டர் சயின்ஸ்' பாடத்தில் 'பைனரி அடிசன்' (binary addition) மற்றும் 'பூலியன் அல்ஜீப்ரா' (boolean algebra)  என்று இரு கணித முறைகள் உள்ளன

'Binary addition'  அண்ட் 'boolean algebra' -  0's அண்ட் 1's மட்டுமே அடிப்படையாக கொண்டது.

இங்கே 'ஒன்று என்கிற என்னோடு மற்றொரு ஒன்றை கூட்டினால்' (1+1) விடை '2' என்று வராது

இதை நான் இங்கே சொல்வதற்கு இரண்டு 'மிக முக்கியாமான' காரணங்கள் உண்டு

முதல் காரணம் -  பகுத்தரிவாதிகளின் முதல் கேள்வியே இது தான்.   1+1=2 என்று தானே வரவேண்டும்.  மேலே கூறியுள்ள விஷயங்களின் மூலம் 1+1=2 என்று எப்பொழுதுமே வர முடியாது என்பது 'கணித ரீதியாகவும்' அவர்களின் முதல் கடவுளான 'அறிவியல் ரீதியாகவும்'  நிருபிக்கபட்டுளது

இரண்டாவது காரணம் - பள்ளி மற்றும் கல்லூரிகளில் 1+1=2 என்று தான் நாம் எல்லோருமே படித்து இருப்போம்.

ஆனால் மனிதன் அவன் 'தேவைகளுக்கு ஏற்ப' ஒரு சில விஷயங்களை 'உருவாக்குவதற்கும்', 'இலகுவாக்குவதர்க்கும்'  அவன் உருவாக்கிய 'கணிதத்தை'  அவனே மாற்றி அமைத்து கொண்டான் என்பது இதன் மூலம் தெளிவாகிறது

என்னடா இவன் 'பூமி மைய்ய மற்றும் சூரிய மைய்ய' கொள்கையை எழுதிகிறேன் என்று சொல்லிவிட்டு 'பால பாடம்' நடத்துகிறானே என்கிற உங்களுடைய 'mind voice' எனக்கு புரிகிறது

 'பூமி மைய்ய மற்றும் சூரிய மைய்ய' தொடர்ச்சியை நாளை பார்ப்போம்

நன்றி 

No comments:

Post a Comment