Total Pageviews

Friday, May 27, 2016

பூமி மைய vs சூரிய மைய கொள்கை - 5

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்

கடந்த பதிவின் தொடர்ச்சி


'சூரிய மைய கொள்கையை' பற்றி மேலும் 2 கேள்விகளுக்கான விடைகளை பார்ப்போம்

(1) எந்த கருவியை பயன்படுத்தி 'copernicus' (அல்லது) 'galileo' பூமி சுற்றுகிறது என்று கண்டுபிடித்தனர் ? 


(2) எந்த கருவியை பயன்படுத்தி 'copernicus' (அல்லது) 'galileo' பூமி '1100 மைல் வேகத்தில்' சுற்றுவதை கண்டுபிடித்தனர் ? 

எனக்கு தெரிந்த வரை (அல்லது) நான் படித்த வரை 'எந்த கருவியின் துணை கொண்டும்' அவர்கள் அதை சொல்ல வில்லை

மாறாக 'கணிதத்தின்' மூலமாகவே அவை சொல்லப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது 

இல்லை, இல்லை.  அப்படி எல்லாம் இல்லை.  உன் பிதற்றலை நிறுத்து என்று நீங்கள் சொல்வது எனக்கு தெரிகிறது :-)

விடை தெரிந்தவர்கள் 'அந்த கருவிகளின் பெயர்களையும்' அவை 'எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன என்பதையும்' எனக்கு தெரிவித்தால் நானும் தெரிந்து கொள்வேன் 
 

இது வரை 'சூரிய மற்றும் பூமி' மைய கொள்கைகளை பற்றி மிக சுருக்கமாக பார்த்தோம்.  (இது முடிவற்ற விவாதம் என்பதே உண்மை)

இப்போது 'ஜோதிடம்' பூமி மைய கொள்கையை பின்பற்றுவதற்கான 'முக்கிய காரணங்கள்'  கீழே கொடுக்கப்பட்டுள்ளன

(1)  இந்த பிரபஞ்சத்தின் அனைத்து உயிர்களுமே இந்த 'பூமியில்' தான் சஞ்சரிகின்றன என்பதை நாம் அறிந்ததே

(2)  வானில் இருந்து வரும்  'நட்சத்திர ஒளிகள்'  பூமியை (எனக்கு தெரிந்த வரை) மட்டுமே வந்தடைகின்றன.   (வானில் இருந்து விழும் 'விண் கற்கள்' மற்றும் இன்ன பிற 'வஸ்த்துக்கள்' எனக்கு தெரிந்து 'பூமியை' தவிர வேறு 'கிரகத்தினில்' விழுந்ததாக தெரியவில்லை)

என்ன தான் மேலே சொல்லப்பட்ட விஷயங்கள் 'ஏற்று கொள்ளும் படியாக' இருந்தாலும் 'விஞ்ஞானம்' இல்லாமல் எங்களால் இதை எல்லாம் ஏற்று கொள்ள முடியாது என்று சொல்பவரா நீங்கள் ?

உங்களுக்காகவே எனக்கு தெரிந்த ஒரு 'பௌதீக விதியை' (physics law) கீழே கொடுத்துள்ளேன்

"When you are dealing with some force acted upon an object in an environment, we consider that the object of interest as the origin and base our analysis on that object"

மேலே சொல்லப்பட்ட விதி போதும் என்று நினைக்கிறேன்

'பூமி' இயற்க்கை அன்னையால் நமக்கு அளிக்கப்பட்ட கொடை.  எனக்கு தெரிந்த வரை (அல்லது) நான் படித்த வரை 'அனைத்து உயிர்களும்' வாழ தகுதியான ஒரே இடம் 'பூமி' மட்டும் தான்


மற்ற விஷயங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம் நண்பர்களே

நன்றி

No comments:

Post a Comment