Total Pageviews

Saturday, May 28, 2016

பூமி மைய vs சூரிய மைய கொள்கை - 6

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்

இந்த பதிவுடன் 'பூமி vs சூரிய' மைய கொள்கையை முடித்து கொள்வோம்

கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் தொடருவோம்.

எனக்கு தெரிந்த சிறு சிறு ஜோதிட பகுதிகளையும் எழுத வேண்டுமல்லவா

கடந்த பதிவுகளில் இருந்து நாம் 'கீழ் ககுறிப்பிட்டுள்ள' புரிதலுக்கு வரலாம்

(1)  'பூமி மையம்' சரியானதா (அல்லது) 'சூரிய மையம்' சரியானதா என்பதை நாம் 'ஒரு வரியில்' விஞ்ஞான ரீதியாகவே 'சொல்லிவிட முடியாது'.

இரண்டு கொள்கைகளிலும் 'சாதக-பாதக' அம்சங்கள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது



(2)   'பூமி சுற்றுகிறது' என்பதை நிரூபிக்க இது வரை நடத்தப்பட்ட அத்தனை 'விஞ்ஞான பரிசோதனைகளும்' (scientific experiments) எனக்கு தெரிந்த வரை தோல்வியில் தான் முடிந்து இருக்கிறது

இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 'Airy's failure experiment' பூமி சுற்றவில்லை என்பதற்கு ஆதாரமாக 'நிறைய இடங்களில்' பேசபடுகிறது

இருந்தாலும் நான் சொன்னால் யாரும் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் :-)


Sir Fred Hoyle
-----------------------

“We know that the difference between a heliocentric theory and a geocentric theory is one of relative motion only,and that such a difference has no physical significance…”Today we cannot say that the Copernican theory is “right” and the Ptolemaic theory is “wrong” in any meaningful sense. The two theories…are physically equivalent to one another.”

https://en.wikipedia.org/wiki/Fred_Hoyle


இன்னும் நிறைய 'விஞ்ஞானிகள்' ஏகப்பட்ட விஷயங்களை சொல்லி இருக்கிறார்கள்.  அதை எல்லாம் சிறிது கால இடைவெளி விட்டு பிறகு பார்ப்போம்

(3)   விஞ்ஞானிகளோ (அல்லது) பகுத்தரிவாதிகளோ 'பூமி சுற்றும் பட்சத்தில்' பறவை தன் கூட்டை எப்படி கண்டுபிடிக்கிறது என்பதற்கு 'விடை சொல்லியே தீர வேண்டும்'.   ஏனெனில் இது ஒரு 'பாமரனின்' கேள்வி அல்லவா?

எனவே ஜோதிடம் 'பூமி மைய' கொள்கையை பின்பற்றுவது தவறு என்று விஞ்ஞான ரீதியாகவே சொல்ல முடியாது

மற்ற விஷயங்களை அடுத்த பதிவில் பார்ககலாம் நண்பர்களே

நன்றி

No comments:

Post a Comment