Total Pageviews

Thursday, May 26, 2016

பூமி மைய vs சூரிய மைய கொள்கை - 4

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்

'Copernicus' மற்றும் 'Galileo' எதற்காக 'பூமி மைய்ய கொள்கையை நிராகரித்தனர்'  என்பதனை நேற்று கொஞ்சம் 'விஞ்ஞான ரீதியாக' பார்த்தோம்.

ஆனால் நம் எல்லோர்க்கும் அவை புரியாதல்லவா.  நாம் எல்லோரும் 'அறிவியிலலோ (அல்லது) வானியல்' மேதைகளோ அல்லவே

எனவே இப்போது எந்த 'அறிவியலும்' கலக்காத எளிய 'பாமரனின்' ஒரு சில சாதாரண கேள்விகளை பார்ப்போம்


1)  'சூரிய மைய்ய கொள்கையின் படி' பூமி 1100 மைல் வேகத்தில் (தோராயமாக) மேற்கில் இருந்து கிழக்காக (West to East) சுற்றுகிறது என்பது நம்மில் பலருக்கு தெரிந்து இருக்கும்


இப்போது ஓர் வாதத்துக்காக 'பூமி சுற்றவில்லை' என்று வைத்து கொள்வோம்.

'பூமி சுற்றாத போதே' பறவைகள் (உதாரணத்திற்கு 'புறாவை' எடுத்து கொள்வோம்) பல மைல்கள் தூரம் பறந்து சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்து பின்பு சரியாக தன்னுடைய 'கூடு' இருக்கும் திரும்பி வருகிறது.

இது எப்படி சாத்தியம் என்று 'விஞ்ஞானிகள்' கண்டுபிடிக்க முடியாமல் இன்றைய நாள் வரை விடை தெரியமால் உள்ளனர்

இப்போது 'பூமி' 1100 மைல் வேகத்தில் சுற்றினால் 'பறவையால்' எப்படி தன்னுடைய 'கூட்டை' கண்டுபிடிக்க முடியும்?   'பறவைகள்' இரை தேடி பூமியின் எத்திசையில் வேண்டுமானாலும் பறக்கலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது

இதையும் பகுத்தறிவாதிகள் சிந்திக்க மாட்டார்கள்.  ஆனாலும் அவர்கள் சொல்லுவது தான் சரி.

மற்ற விஷயங்களுக்கு 'விஞ்ஞானிகளால்' (அல்லது) 'பகுத்தறிவாதிகளால்' பதில் சொல்ல முடியவில்லை என்றாலும் பரவாயில்லை.

இந்த கேள்விக்கு அவர்கள் பதில் அளித்து தான் ஆக வேண்டும்.  

ஏனெனில் இந்த விஷயம் 'படித்தவர்கள்' முதல் 'பாமரன்' வரை எல்லோருக்குமே புரியும்.  தெரியும்.

இன்னும் ஒரு கேள்வியோடு இன்றைய பதிவை நிறைவு செய்வோம் நண்பர்களே

(2)   'சூரிய மைய்ய கொள்கையின் படி' பூமி தன்னுடைய அச்சில் சுழல்வது மட்டுமில்லாமல் தன்னுடன் ஒட்டி இருக்கும் 'காற்று மண்டலத்தையும்' (earth atmosphere) சேர்த்து சுழல செய்கிறது

'காற்று மண்டலம்' சுழலும் போது  'காற்று மண்டலத்தின்' அங்கமான மேக கூட்டங்கள் மட்டும் தனியாக 'நாற் திசைகளிலும்' கடந்து செல்வதை (passing clouds) பார்க்க முடிகிறது.

இதுவும் எப்படி சாத்தியம் என்று எனக்கு தெரியவில்லை

மற்ற விஷயங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம் நண்பர்களே

நன்றி

No comments:

Post a Comment