Total Pageviews

Wednesday, May 25, 2016

பூமி மைய vs சூரிய மைய கொள்கை - 3

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்

'Copernicus' மற்றும் 'Galileo' எதற்காக 'பூமி மைய்ய கொள்கையை நிராகரித்தனர்' என்பதை இப்போது பார்ப்போம்

நீண்ட காலமாக (அல்லது) பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த 'பூமி மைய கொள்கையில்' ஒரு சில குறைபாடுகளை 'copernicus' மற்றும் 'galileo' கண்டுகொண்டனர்.

இங்கே குறைபாடுகள் என்பது வானியல் கணித ரீதியாக (astronomical calculations) என்று எடுத்துகொள்க

(1)  'பூமி மைய கொள்கையில்' சூரிய கிரகணம் (solar eclipse)  பற்றி தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்படவில்லை.

ஆனால் தற்போது உள்ள  'சூரிய மைய்ய கொள்கையிலும்' இதே நிலை தான் நீடிக்கிறது.   இதை பற்றி தற்போது சுருக்கமாக பார்க்கலாம் (விரிவாக பின்னர் எழுதுகிறேன்)


சூரிய கிரகணத்தை பற்றி தற்கால விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்

 "the motion of the moon "outstrips" that of the earth and cause the west to east shadow of the moon upon the earth"
 
 
அதாவது சூரிய கிரகணம் நிகழும் அன்று ஒரு நாள் மட்டும் 'சந்திரன்' தன்னுடைய வழக்கமான வேகத்தை அதி வேகத்தில் சுழல்கிறது.   சூரிய கிரகணம் முடிந்த பிறகு 'automaticகாக' எப்பொழுதும் போல் 'சந்திரன்' தன்னுடைய பழைய வேகத்தை அடைகிறது.

இது எப்படி சாத்தியம் என்பதை விஞ்ஞானிகள் எனக்கு தெரிந்த வரை விளக்கவில்லை

பகுத்தறிவாதிகள் இதை பற்றி எல்லாம் படிக்கவும் மாட்டார்கள், சிந்திக்கவும் மாட்டார்கள்.  ஆனால் அவர்கள் சொல்வது தான் சரி

இதன் மூலமாக 'சூரிய மைய்ய கொள்கையில்' உள்ள பல குறைபாடுகளில் ஒன்றை மட்டும் இப்போது நாம் தெரிந்து கொண்டோம்

(2)  'பூமி மைய்ய கொள்கையில்' கிரகங்களின் வக்கிரக கதியை (Retrograde movements) பற்றி டாலமி (Ptolemy)  அவர்களின் 'வானியல் கணிதம்' எளிதில் விளங்கும்படியாகவோ (அல்லது) 'அறிவியல் ரீதியாக' எளிதில் நிரூபிக்கும் வகையில் இல்லை

இந்த விஷயத்தில் 'சூரிய மைய்ய கொள்கையை' பொறுத்த வரைக்கும் 'வானியல் கணிதம்' சற்று 'better' என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


ஆனால் இங்கேயும் 'பூமி மைய்ய கொள்கை' தோற்று விடவில்லை.   வக்கிர கதியை பற்றி   'டாலமி' அவர்கள் தந்த 'வானியல் கணிதம்' இந்த பேரண்டத்திற்கு (அதாவது galaxyக்கு) வெளியில் இருந்து பார்த்தால் 'சரியாக இருக்கும்' என்கிற கருத்தும் நிலவுகிறது

மற்ற விஷயங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம் நண்பர்களே

நன்றி

No comments:

Post a Comment